Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Karnan

சேலம் கூட்டுறவு தேர்தல்: அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கோல்மால் செய்தது அம்பலம்!

சேலம் கூட்டுறவு தேர்தல்: அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கோல்மால் செய்தது அம்பலம்!

ஈரோடு, சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்யாதவர்களை எல்லாம் நிர்வாகிகளாக நியமிக்க சதி செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. சேலம் பள்ளப்பட்டியில் எஸ்.111, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், கடந்த 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த வீட்டுவசதி சங்க பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் அங்கத்தினர்களாக உள்ளனர். இதன் உறுப்பினர்களிடம் இருந்து நிரந்தர இட்டு வைப்புகளை பெறுவதும், அவர்களுக்கு கடனுதவிகளை வழங்குவதும் இந்த சங்கத்தின் பணிகளாகும். கூட்டுறவு தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சிகளே அனைத்துப் பதவிகளையும் சட்ட விரோதமாக கைப்பற்றுவதுதான் தமிழ்நாட்டில் காலங்க
கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திராவிட சிந்தனையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முகமாகவே கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பலமாக உருவாகி உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்ற நேரத்தில் இருந்தே கமலின் அரசியல் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் ரொம்பவே 'வைரல்' ஆகி வருகின்றன. பல படங்களில், கமல் பேசிய முற்போக்கு வசனக் காட்சிகளை அவருடைய ரசிகர்கள் தேடிப்பிடித்து 'வைரல்' ஆக்கி வருகின்றனர். தமிழ் சினிமாக்களில் அவர் எந்தளவுக்கு திராவிடம் பேசினாரோ, அதற்கு நிகராக வைணவக் கருத்துகளையும், கடவுள் மீதான நம்பிக்கைகளையும் எதிர் பாத்திரங்கள் மூலம் வார்த்தெடுத்திருக்கிறார். ஒருவேளை, தன் கருத்துகளை ஆழமாகச் சொல்வதற்காக அத்தகைய பாத்திரங்களை சித்தரித்திருக்கலாம். அல்லது, வணிக நோக்கமாக இருக்கலாம். எனினும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கமல்ஹாசன், பெரியாரிஸத்தையோ, பொதுவ