Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Kanimozhi

ஆர்.கே. நகர்: மு.க.ஸ்டாலின் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்!

ஆர்.கே. நகர்: மு.க.ஸ்டாலின் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேர்தல் அரசியல் களத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவருடைய வியூகங்களும் களப்பணிகளும் காட்டுகின்றன. சமூக வலைத்தளங்களிலும் அவருடைய செயல்பாடுகள் ரொம்பவே கேலிக்குள்ளாகி இருக்கின்றன.  திராவிட இயக்கத்தின் சித்தாந்தங்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச்செல்லக்கூடிய தலைவராக மு.க.ஸ்டாலின் பார்க்கப்படுகிறார். மேயர், எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவர் என அரசியல் படிநிலைகளிலும், இளைஞரணி செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என கட்சிக்குள்ளும் அவருடைய வளர்ச்சி நின்று நிதானமாகவே இருந்து வந்திருக்கிறது. சசிகலாவை உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக்கொண்டதாலேயே அவர் கைக்காட்டிய மன்னார்குடி பரிவாரங்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளை வாரிக்கொடுத்த ஜெயலலிதா போல், இந்திய அரசியலின் ஆகப்பெரும் தலைவரான கருணாநிதி தன் மகன் மு.க.ஸ்டாலினுக்கு அப...
2ஜி வழக்கில் தீர்ப்பு அளித்த  நீதிபதி ஓ.பி.சைனி யார்?;  “ஊழலுக்கு எதிரான கறார் கந்தசாமியாம்”!!

2ஜி வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஓ.பி.சைனி யார்?; “ஊழலுக்கு எதிரான கறார் கந்தசாமியாம்”!!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, ஊழலுக்கு எதிராக ரொம்பவே கறார் காட்டக்கூடிய நீதிபதி என்றும், காவல்துறையில் உதவி ஆய்வாளராக இருந்து நீதித்துறைக்கு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பாக அப்போது கூட்டணியில் இருந்த திமுக அமைச்சர் ஆ.ராஜா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வந்தது. மத்திய கணக்குத் தணிக்கைத்துறை ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறியிருந்தாலும், சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்...
2ஜி வழக்கு: ஆ.ராஜா, கனிமொழி விடுதலை; சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

2ஜி வழக்கு: ஆ.ராஜா, கனிமொழி விடுதலை; சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2 ஜி அலைக்கற்றை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கனிமொழி எம்பி, முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21, 2017) தீர்ப்பு அளித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராஜா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தின் மூலமாக, ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை ஆணையர் வினோத் ராய் (சிஏஜி) அறிக்கை சமர்ப்பித்தார். இதுபோன்ற இமாலய ஊழல் குற்றச்சாட்டு சுதந்திர இந்தியா அதற்கு முன் கேள்விப்பட்டதில்லை எனும் அளவுக்கு, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற புதிய கொள்கையின்படி ஆ.ராஜா, அவருக்கு வேண்டிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி...
கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவம்பர் 6, 2017) காலை சென்னை வந்தார். முன்னதாக அவர் தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த நரேந்திர மோடி, ஓய்வு எடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது கருணாநிதிக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த உபகரணம் அகற்றப்பட்டு, தொண்டையில் தையல் போடப்பட்டு உள்ளது. இன்னும் அந்த தையல் பிரிக்கப்படவில்லை. இதனால் அவரால் உரக்கப் பேச முடியவில்லை. பணி மூப்...