நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்…! திரை இசையில் வள்ளுவம் (தொடர்)
திரை இசையில் வள்ளுவம்: (தொடர் - 8/17)
நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்...
கடந்த இரண்டு தொடர்களிலும் 'ஊக்கம் உடைமை', 'மெய்ப்பொருள் அறிதல்' என அடுத்தடுத்து அறிவுரை மழையாகி விட்டதே என்று வாசகர்கள் சிலர் நினைத்திருக்கக் கூடும். அதனால்தான் இந்த முறை, நோயும் நோய் தீர்க்கும் மருந்தையும் பாடுபொருளாக எடுத்துக் கொண்டோம்.
'என்னது மருத்துவக் கட்டுரையா?. அதற்குத்தான் 'நலமறிய ஆவல்' என்ற பகுதி இருக்கிறதே' என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. பதற்றம் கொள்ள வேண்டாம். நான் குறிப்பிடும், நோய் என்பது நோய் அல்ல; மருந்து என்பதும் மருந்து அல்ல. ஆனால், அந்த நோயும் மருந்தும் ஆதாம் ஏவாள் காலத்து அரதப்பழசு.
சரி. பீடிகை போடாமல் விஷயத்திற்கு வருகிறேன். 'மகாதேவி' (1957) படத்தில் ஒரு சிறுவனின் காலில் பாம்பு கடித்து விடும். எந்தப் பாம்பு கடித...