கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?; சமூகவலைத்தளங்களில் வைரல்
பெருந்துறையில் உள்ள ஓர் உணவகத்தில், கழிப்பறையை பயன்படுத்திய வாடிக்கையாளரிடம் பத்து ரூபாய் கட்டணமும், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், பார்சல் கட்டணமும் வசூலித்துள்ள நிகழ்வு, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்காக பெரும்பாலான உணவகங்களில் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, சில உணவகங்கள் கழிப்பறை பயன்பாட்டுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ருக்குமணி அம்மாள் ஹோட்டல் என்ற பெயரில் பிரபலமான ஓர் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம், ஜூனியர் குப்பண்ணா உணவக உரிமையாளர்களுக்குச் சொந்தமானது.
இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளர் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அதற்காக அந்த உணவக நிர்வாகம், 10 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, அதற்கு மாநில ஜிஎஸ்டி,...