Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Judge Duraiasamy

6ம் தேதி முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம்!

6ம் தேதி முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாகன ஓட்டிகள், வரும் 6ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, வாகன ஓட்டிகள் செப். 1ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியது. டிஜிட்டல் உலகத்தில், அசல் உரிமத்தை கையில் வைத்திருக்காமல், 'டிஜி லாக்கர்' முறையில் பதிவு செய்து கொண்டால் போதுமானது என்றெல்லாம் கருத்துகள் எழுந்தன. இதையெல்லாம் ஏற்க மறுத்த தமிழக அரசு, தனது உத்தரவில் உறுதியாக இருந்தது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த வாரம் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விச
அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை!

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாகன ஓட்டிகள், வாகனங்களில் செல்லும்போது அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அது தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, வாகன ஓட்டுநர்கள் உரிய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும், சீருடை அணிந்த காவல்துறையினர் வாகன தணிக்கை செய்யும்போது, அசல் உரிமத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் (பிரிவு 130) என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், செப்டம்பர் 1ம் தேதி (இன்று) முதல் அனைத்து வகை வாகன ஓட்டிகளும், வாகன பயணத்தின்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அவ்வாறு அசல் உரிமம் இல்லாவிட்டால், மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இவை இரண்டு சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது. இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே