நிச்சயமாக மோடி ஒரு பாசிசவாதிதான்! ஜாவேத் அக்தர் அதிரடி தாக்கு!!
கலை, இலக்கியத் துறைகளில்
இயங்கி வரும் படைப்பாளிகள்
தொடக்கத்தில் இருந்தே
நடுவண் பாஜக அரசையும்,
பிரதமர் நரேந்திர மோடியையும்
கடுமையாக சாடி வருகின்றனர்.
பாலிவுட்டில் பாடலாசிரியர்,
திரைக்கதை ஆசிரியர் என
பன்முகம் காட்டும் ஜாவித் ஆக்தர்
மற்றும் அவருடைய சகாவும்,
பிரபல இயக்குநருமான
மகேஷ் பட் ஆகியோர்,
மோடியை குடியுரிமை
திருத்தச் சட்டம் தொடர்பாக
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
போட்டுத் தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள்
இருவரும் அல் ஜஸீரா செய்தி
சேனலுக்கு வியாழனன்று (பிப். 13)
அளித்த நேர்காணலில்,
மோடி மீது மீண்டும்
கடும் விமர்சனங்களை
முன்வைத்தனர். ஜாவேத் அக்தர்,
'சந்தேகமே இல்லாமல் மோடி
ஒரு பாசிசவாதிதான்' என்று
கடுமையாக விமர்சித்து
இருந்தார்.
அந்த டிவி சானலின் நெறியாளர் ஜாவேத் ஆக்தரிடம், ''மோடி ஒரு பாசிசவாதி என்று ஜாவேத் கருதுகிறாரா?,'' என...