நியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா; தொடரை வென்று சாதனை
திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 7, 2017) நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று, 2-1 கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. டெல்லியில் நடந்த முதல் இருபது ஓவர் போட்டியில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்தும் வென்று 1-1 கணக்கில் சமநிலையில் இருந்தன.
இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய் ந்ததாக இருந்தது.
மேலும், 29 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் மைதானத்தில் ஐசிசி போட்டி நடப்பதால் எதிர்பார்த்ததைவிட ரசிகர...