சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடையய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் டிச. 21ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
இருவரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள்கள் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் மூத்தத் தலைவர்களில்
ஒருவரான க.பொன்முடி,
தற்போது தமிழக உயர்கல்வித்துறை
அமைச்சராக உள்ளார்.
இவர், கடந்த 2006 - 2011 வரையிலான
திமுக அமைச்சரவையில் உயர்கல்வி
மற்றும் கனிமவளத்துறை
அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது,
வருமானத்திற்கு அதிகமாக
1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக
பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி
ஆகியோர் மீது கடந்த 2011ம் ஆண்டு
அதிமுக ஆட்சிக் காலத்தில்,
விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு
...