
2024ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? யாரை?
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுள் தேடு பொறியில் உலக நாடுகள் அதிகம் தேடிய நிகழ்வுகள், பிரபலங்கள், விவகாரங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. எந்தெந்த சொற்களை அதிகமாக பயனர்கள் தேடினர் என்ற விவரங்களையும் ஆவணப்படுத்துகிறது கூகுள்.
நாம் இப்போது,நடப்பு 2024ஆம் ஆண்டின்இறுதிப் பகுதியில் இருக்கிறோம்.இந்த ஆண்டில் இந்தியர்கள்ஐபிஎல் கிரிக்கெட் முதல்ரத்தன் டாடா வரைகூகுள் தேடு பொறியில்அதிகமாக தேடித்தேடிபடித்திருக்கிறார்கள் என்பதுதெரிய வந்துள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரைகிரிக்கெட், அரசியல், பிரபலங்களைப் பற்றிதெரிந்து கொள்வதுதான் கூகுளில்ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன.
கூகுள் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, ஐபிஎல் கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை 2024ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் பேரால் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் அடங்கும். இது, கிரிக்கெட் மற்றும்...