மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!
சசிகலா, தினகரன் மற்றும் அவருடைய நெருங்கிய வட்டாரங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (நவம்பர் 11, 2017) சோதனை நடத்தி வருகிறது.
இதற்கு முன், எத்தனையோ முறை இதுபோன்ற சோதனைகளை மன்னார்குடி கும்பல் சந்தித்து இருந்தாலும், இப்போது போன்ற மெகா சோதனையை எதிர்கொண்டதில்லை.
முதல் நாளில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரண்டாவது நாளான நேற்று ஊடகங்களைச் சந்திப்பதை தவிர்த்தார். இதற்கிடையே, ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கிடைத்ததாகவும், பாஸ்கரன் வீட்டில் இருந்து 15 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்தத் தகவல்கள் எதுவுமே வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களாகச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும், யூகங்கள் அடிப்படையிலும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு ...