Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: inflation

‘பணவீக்கம்’ மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி – ஆய்வில் தகவல்

‘பணவீக்கம்’ மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி – ஆய்வில் தகவல்

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்தியா டுடே, தேசத்தின் மனநிலை குறித்து அண்மையில் ஓர் ஆய்வை நடத்தியது. நாடு முழுவதும் 35801 பேரிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது. வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, தனிநபர் வருவாய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, 2023, டிச. 15 முதல் 2024, ஜன. 28க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடந்தது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், இப்போது அதிதீவிரமான பிரச்னையே இதுதான் என்று 71 சதவீதம் பேர் கொட்டித் தீர்த்துள்ளனர். படிப்புக்கேற்ற தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்காததால், வேலையின் தரமும் குறைந்துள்ளது என்றும் புலம்புகின்றனர். அரசாங்க வேலைக்காக ஒரு பெரும் குழு, போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருவதாகவும் சொல்கின்றனர். ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிவீர் திட்டம், இளைஞர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதோடு, குறுகிய கால ஒப்பந்தம் என்பதால் இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்ப
சேலம்: 10 ரூபாய்க்கு 5 தோசை; ரூ.30க்கு முழு சாப்பாடே கிடைக்கும்!

சேலம்: 10 ரூபாய்க்கு 5 தோசை; ரூ.30க்கு முழு சாப்பாடே கிடைக்கும்!

உணவு, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை- சட்டைப்பையில் வெறும் 20 ரூபாய் இருந்தால்போதும் வயிறார சாப்பிடலாம். முப்பது ரூபாயில் பொரியல், அப்பளம் சகிதமாக முழு சாப்பாடே சாப்பிட முடியும். இதெல்லாம் அனேகமாக சேலத்தில் மட்டுமே சாத்தியமாகக்கூடும் என்பதே நிதர்சனம்.     சேலம் நகராட்சி, தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய மாநகராட்சியாக 1994ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், தனிநபர் வருவாய் அடிப்படையில் பெரிய முன்னேற்றங்கள் இல்லை. தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆய்வில், சேலம் மக்களின் தனிநபர் வருவாய் 2004-05 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.29271 ஆக இருந்தது.     இந்த வருவாய் ஐந்து ஆண்டுகளில், 2010-11 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.48802 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது சேலம் மக்கள் மாதத்திற்கு சராசரியாக ரூ.4067 பொருளீட்டுகின்றனர். இதை இப்படியும் சொல்லலாம்