Saturday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Indirani

சேலம்: இந்திரா எனும் கிளாரா ஸெட்கின்!;  ”கள்ளச்சாராயத்தை ஒழித்த காரிகை”

சேலம்: இந்திரா எனும் கிளாரா ஸெட்கின்!; ”கள்ளச்சாராயத்தை ஒழித்த காரிகை”

சிறப்பு கட்டுரைகள், சேலம், மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின சிறப்புக் கட்டுரை-   இன்று உலகெங்கும் முதலாளிய வண்ணங்களுடன் பொழுதுபோக்கு சடங்காக நடத்தப்பட்டும் வரும் மகளிர் தினம் என்பது, உண்மையில் குருதியில் மலர்ந்தது. உழைக்கும் பெண்களை சுரண்டிப் பிழைத்த கூட்டத்தினரிடம் இருந்து பெண்களுக்கான உரிமையை மீட்டெடுத்த சர்வதேச பொதுவுடைமை இயக்கத் தலைவரான கிளாரா ஸெட்கின் போன்றவர்தான் சேலம் இந்திராணி (53). சேலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மின்னாம்பள்ளி கிராமம். பல்வேறு சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஊர்தான். எனினும், பட்டியல் இனத்தவர் இங்கு அதிகம். 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்னாம்பள்ளி, கள்ளச்சாராய விற்பனை மையமாக இருந்தது. அந்த ஊரில் முக்கிய தலைகள் பத்து பேர். கள்ளச்சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பதுதான் அவர்களின் முழுநேரத் தொழில். மின்னாம்பள்ளியில் கூலித்தொழிலாளர்களை போதையில் வைத்திருந்த 'பெருமை' அவர்களுக்கு...