யாருக்கான ஊடகங்கள்?: சிரியா யுத்தமும் ஸ்ரீதேவி இறுதிச்சடங்கும்!
ஒட்டுமொத்த இந்திய காட்சி ஊடகங்களும் ஸ்ரீதேவி துக்கத்தில் இருந்து இன்று (பிப்ரவரி 28, 2018) முதல் மெதுவாக விடுபட்டு விடும் என நம்பலாம். பத்திரிகைகளை விடவும் இந்தக் காட்சி ஊடகங்களின் செயல்பாடுகள் ஏன் எப்போதும் வர்க்க நலன் சார்ந்தே இருக்கின்றன என்பது தான் எனக்குப் புரியவில்லை.
அரசாங்கங்களை இயக்குவது ஊடகமா? அல்லது ஊடகத்திற்குத் தீனி போடுவது அரசாங்கமா? என்பது புரிந்து விடக்கூடாத அளவில் இரண்டும் திரைமறைவில் கைகோத்து செயல்படுகின்றன.
ஒகி புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பாத இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான், துபாயில் இருந்து ஸ்ரீதேவியின் சடலத்தைக் கொண்டு வர அம்பானிக்குச் சொந்தமான தனி விமானத்தை ஏற்பாடு செய்து தருகிறார்.
இந்த அரசியலைப் பற்றியெல்லாம் எந்த ஓர் அச்சு அல்லது மின்னணு ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, ஸ்ரீதேவியின்...