Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Independent

தேர்தலில் தனித்து போட்டி; ரஜினி அதிரடி அரசியல் பிரவேசம்!

தேர்தலில் தனித்து போட்டி; ரஜினி அதிரடி அரசியல் பிரவேசம்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த சர்ச்சை இன்று முடிவுக்கு வந்தது. அரசியலுக்கு வருவது உறுதி என்றும், சட்டப்பேரவை தேர்தலில் 234 தொ குதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்றும் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 31, 2017) அதிரடியாக அறிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆறு நாள்களாக ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை இன்று அறிவிப்பதாக அவர் ஏற்கனவே சொல்லி இருந்தார். அதன்படி, ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான இன்று காலை அவர் ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வந்தார். அப்போது ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார். அவர் அவ்வாறு கூறியதும், ரசிகர்கள் அரங்கம் அதிர பலத்த கரவொலி எழுப்ப
ஆர்.கே.நகர்: 89013 ஓட்டுகள் பெற்று டிடிவி தினகரன் வெற்றி; டெபாசிட் இழந்தது திமுக; முழு விவரம்

ஆர்.கே.நகர்: 89013 ஓட்டுகள் பெற்று டிடிவி தினகரன் வெற்றி; டெபாசிட் இழந்தது திமுக; முழு விவரம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பிரஷ்ஷர் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், 89013 வாக்குகள் பெற்று அமோக பெற்றி பெற்றார். ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட அவர் 40707 வாக்குகள் கூடுதலாக பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அவர் உடல்நலக்குறைவால் இறந்தார். கடந்த ஓராண்டாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதற்கிடையே ஆளும் அதிமுகவுக்குள் ஏற்பட்ட உள்கட்சி பிரச்னைகளால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓரணியாகவும், டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவு பட்டது. முடக்கப்பட்டு இருந்த இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சிப்
நிர்மலா சீதாராமன்: பாதுகாப்புத்துறை அமைச்சரான முதல் தமிழச்சி!

நிர்மலா சீதாராமன்: பாதுகாப்புத்துறை அமைச்சரான முதல் தமிழச்சி!

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடுவண் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பதவியேற்றுக் கொண்டார். சுதந்திர இந்தியாவில் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முதல் தமிழர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றி அமைக்கப்பட்டது. 9 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அனைவருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் இரண்டு மாற்றங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுவரை தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக தனி அதிகாரத்துடன் இருந்து வந்த நிர்மலா சீதாராமனுக்கு, நாட்டின் மிக இலாகாக்களில் ஒன்றான பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டு உள்ளது. சுதந்திர இந்தியாவில் இத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் தமி