Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Independence day

3000 பாம்புகளை காப்பாற்றிய ஓசூர் ‘ஸ்னேக்’ டேவிட்!;  ”விரலை இழந்த பின்னும்  தணியாத ஆர்வம்”

3000 பாம்புகளை காப்பாற்றிய ஓசூர் ‘ஸ்னேக்’ டேவிட்!; ”விரலை இழந்த பின்னும் தணியாத ஆர்வம்”

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை ''பாம்புகள் பற்றிய தவறான அபிப்ராயங்களால்தான் அவற்றை மனிதர்கள் கொல்லத் துடிக்கின்றனர். அதைப் புரிந்து கொண்டால் வீட்டுக்கு வீடு நாய் வளர்ப்பதுபோல் பாம்புகளை வளர்க்க ஆரம்பித்து விடுவோம்,'' என்கிறார் டேவிட் மாறன். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் டேவிட் மாறன். அசோக் லேலன்ட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மனைவி அழகேஸ்வரி. ஹைம் ஸ்கை, வெண்ணிலா என இரண்டு பெண் குழந்தைகள். டேவிட் மாறன் என்று சொன்னால்கூட பலர் ஒரு கணம் யோசிக்கக் கூடும். ஆனால், 'ஸ்னேக்' டேவிட் என்ற அடைமொழியுடன் கேட்டால், சின்னக் குழந்தைகூட அவருடைய வீட்டுக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும். இந்தக் காலத்தில் சக மனிதர் ஒருவர் சாலையில் அடிபட்டுக் கிடந்தால்கூட 'உச்' கொட்டிவிட்டு கடந்து சென்று விடுவோர்தான் அதிகம். ஆனால், பாம்புகளுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் முதல் ஆளாக பறந்து சென்று மீட்பதில் தனிக்க...