Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: increase

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது!; நீர் திறப்பு அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி!!

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது!; நீர் திறப்பு அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 39வது ஆண்டாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.     சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, காவிரி ஆற்றின் குறுக்கே 1934ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி. 93.47 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.     கர்நாடகா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பின. அந்த அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. கடந்த 15 நாள்களாக வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் நீர் வந்து கொண்டிருந்தது.   &...
இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார இடைவெளி!; ‘ரிச் கெட் ரிச்சர்’

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார இடைவெளி!; ‘ரிச் கெட் ரிச்சர்’

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்தியாவில் உள்ள 73 சதவீத சொத்துகளும், வளங்களும் நாட்டின் ஒரு சதவீதம் பேரிடம் மட் டுமே குவிந்து கிடப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், இந்தியாவில் ஏழை - பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி ஆண்டுதோறும் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபாம், ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் பொருளாதார இடைவெளி குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளிட்டு வருகிறது. 2017ம் ஆண்டுக்கான அறிக்கையை அண்மையில், 'ரிவார்டு ஒர்க்; நாட் வெல்த்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்பட மொத்தம் பத்து நாடுகளில் 70 ஆயிரம் பேரிடம் இதற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளது. கிடைத்த புள்ளிவிவரங்களைக் கொண்டு டபிள்யூ.இ.எப் என்ற உலக பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் ஆய்வுடன் எந்தளவுக்கு ஒத்துப்போகிறது என்பதையும் தெளிவுபடுத்திய பிறகு, தனது அறி க்கையை வெ...
கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!

கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நிலவேம்பு குடிநீர், டெங்கு காய்ச்சலை தடுக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் இல்லாததால், அதை விநியோகிப்பதை நிறுத்தி வைக்குமாறு நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இணையவாசிகள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சல் தாக்கம் இருந்து வருகிறது. சுமார் 12000 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல், இன்ன பிற இனம் காண முடியாத காய்ச்சல் காரணமாக கடந்த சில மாதங்களில் 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், டெங்கு காரணமாக 40 பேர் மட்டுமே இறந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுளது. இதற்கிடையே, நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுவதாகவும், ரத்தத்தில் பிளேட்டிலெட் செல்கள் அதிகரிப்பதாகவ...
அமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு?

அமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் நடத்தி வரும் நிறுவனத்தின் வர்த்தகம், நரேந்திர மோடி பிரதமர் ஆன ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. இவருடைய மகன் ஜெய் ஷா. இவர் 'ஷா'ஸ் டெம்பிள் என்டர்பிரைசஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். சில ஆயிரங்களில் வெறும் பெயரளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த 2013ம் ஆண்டில் ரூ.6230ம், 2014ம் நிதியாண்டில் ரூ.1724ம் இழப்பு கண்டதாக கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2014-15ம் நிதியாண்டில் டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50 ஆயிரம் என்றும், அந்த ஆண்டு ரூ.18728 லாபம் அடைந்துள்ளதாகவும் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத...