தமிழை கொலை செய்யும் ஊடகங்கள்! நாஞ்சில் சம்பத் ‘நறநற!!’
தமிழ்நாட்டில் உள்ள எல்லா
காட்சி ஊடகங்களும் திட்டமிட்டு
தமிழ்க்கொலை செய்வதாகவும்,
அதனாலேயே ஊடக விவாதங்களில்
பங்கேற்க விரும்புவதில்லை என்றும்
நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இலக்கிய மேடை, அரசியல் மேடை என இரட்டை குதிரையில் சவாரி செய்து வந்த தரமான சொற்பொழிவாளர்களுள் ஒருவரான நாஞ்சில் சம்பத், அரசியல் களத்தை விட்டு வெறியேறி விட்டதாக கடந்த ஆண்டு கூறினார்.
மதிமுக தலைவர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அக்கட்சியில் இருந்து வெளியேறி, சில காலம் ஒதுங்கி இருந்தார். பின்னர் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே துணை கொள்கைபரப்பு செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. சுற்றுப்பயணம் மேற்கொள்ள வசதியாக அவருக்கு ஜெ., புதிதாக இன்னோவா கார் ஒன்றும் பரிசாக வழங்கினார். இன்னோவா காருக்காக அதிமுகவ...