எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டம்! விவசாயிகளின் பிரம்மாஸ்திரம்!!
எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டத்திற்கும் தயாராகி விட்டதாக விவசாயிகள் போர்ப்பறை முழங்கியுள்ளது, இப்பிரச்னையை மீண்டும் விசுவரூபம் எடுக்க வைத்துள்ளது.
2343 ஹெக்டேர்
சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச்சாலையாக பசுமைவழி விரைவுச்சாலை (பாரத்மாலா பரியோஜனா) அமைக்கும் பணிகளை பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக சென்னை படப்பையில் முடிவடைகிறது இந்த சாலைத்திட்டம். இதற்காக மேற்சொன்னை ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட வருவாய்த்துறை இறங்கியுள்ளது.
ஒரே வாழ்வாதாரம்
இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பகுதி, அதாவது 90 விழுக்காடு நிலமானது ஏழை சிறு, குறு விவசாயிகள் உடையது. அவர்...