ஏற்காட்டில் கோடை விழா, மலர்க்கண்காட்சி தொடங்கியது; 5 நாள்கள் நடக்கிறது
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, 'ஏழைகளின் ஊட்டி', 'மலைகளின் அரசன்' என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு முன்னதாகவே அதாவது மே மாதம் இரண்டாவது வாரத்திலேயே கோடை விழா நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.
அதன்படி, ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று (மே 12, 2018) தொடங்கியது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவைத் தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.
கோடை விழாவையொட்டி 24 ஆயிரம் கார்னேசன் மலர்கள், பல வண்ண ரோஜாக்கள் உள்பட ஒரு லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்நாடு தலைமைச் செயலக அமைப்பு, சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்கும் ...