சேலம் மைய நூலகத்திற்கு அடுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு!
சேலம் மாவட்ட மைய
நூலகத்திற்குச் சொந்தமான
இடத்தை நியூ செஞ்சுரி
புத்தக நிறுவனத்திற்கு
தாரை வார்க்கப்படுவதாக
வந்த தகவலால், அதிர்ச்சி
அடைந்த பாஜக, இந்து முன்னணி
நிர்வாகிகள், தங்கள்
கட்சிகளுக்கும் நூலக
வளாகத்தில் கடை
கட்டிக்கொள்ள இடம்
ஒதுக்குமாறு திடீர்
கோதாவில் குதித்துள்ளனர்.
சேலம் குமாரசாமிப்பட்டியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகில், மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தின் பின்பகுதியில் 5000 சதுர அடிக்கு மேல் காலி நிலம் உள்ளது. இந்த இடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு கடை கட்டிக்கொள்ள சேலம் மாவட்ட நிர்வாகம் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும்போது, பழைய பேலஸ் தியேட்டர் எதிரில் செயல...