Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: hike

2ஜி தீர்ப்பு எதிரொலி: டிபி ரியால்டி, சன் டிவி, யுனிடெக் பங்குகள் உயர்வு!

2ஜி தீர்ப்பு எதிரொலி: டிபி ரியால்டி, சன் டிவி, யுனிடெக் பங்குகள் உயர்வு!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
2ஜி அலைக்கற்றை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, மாறன் சகோதரர்களின் சன் டிவி நெட்வொர்க் மற்றும் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவனங்களின் பங்குகள் இன்று 20 சதவீதம் வரை உயர்ந்தன. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மீதான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு மற்றும் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் இன்று (டிசம்பர் 21, 2017) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவன இயக்குநர்கள் பெயர்களும் சேர்க்கப்பட்டு இருந்தன. போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, மும்பை பங்குச்சந்தையில் டிபி ரியால்டி நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகபட்சமாக 19.89 சதவீதம் வரை உயர்ந்தது. இறுதியில் ரூ.43
அரசு ஊழியர்கள் காட்டில் பணமழை!;  இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு

அரசு ஊழியர்கள் காட்டில் பணமழை!; இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமப் பஞ்சாயத்துச் செயலர் ஆகியோரின் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் நேற்று (அக். 11, 2017) வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச ஊதியம் 6,100 ரூபாயிலிருந்து 15,700 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 77 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.25 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவையும் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஓய்வுபெறும்போது வழங்கப்படும் அதிகபட்ச பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூ