ஒற்றை சாக்கு மூட்டையும் ஒரு கிரவுண்டு நிலமும்! அடமானம் வைக்கப்பட்ட பெண் ஊரின் அடையாளமானார்!!
சேலம் மாவட்டம்
புத்தூர் அக்ரஹாரம்
சந்தனக்காரன் காடு பகுதியில்,
'செட்டியாரம்மா' என்றால்
சின்ன குழந்தைகளும்
சொல்லி விடும். ஆமாம்.
பண்ணாரியம்மன் களஞ்சியம்
குழுவின் மூத்த உறுப்பினரான
ஜெயந்தியை (50) அப்பகுதியில்
'செட்டியாரம்மா' என்றே
அழைக்கிறார்கள். சத்தியமங்கலத்தில்
இருந்து மூட்டை முடிச்சுகளுடன்
பிழைப்புத்தேடி கைக்குழந்தைகளுடன்
சேலம் வந்த அவர், சந்தனக்காரன்காடு
கிராமத்தின் அடையாளமாக
வளர்ந்திருக்கிறார். அந்தளவுக்கு
அவர் எட்டிப்பிடித்த உயரங்கள்
அளப்பரியது.
''தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்''
என்ற அய்யன் வள்ளுவன்
வாக்கிற்கு ஏற்ப, தன்னையும்
உயர்த்திக்கொண்டு கரம் பற்றிய
கணவரையும், பெற்றெடுத்த
பிள்ளைகளையும் கரை
சேர்த்திருக்கிறார் ஜெயந்தி.
பண்ணாரியம்மன் களஞ்சியம் மகளிர் குழுவில்
பதினைந்து ஆண்டுகளுக்கும் மே...