Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: gurmeet Ram Rahim singh

குர்மீத் ராமுக்கு 20 ஆண்டு சிறை

குர்மீத் ராமுக்கு 20 ஆண்டு சிறை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
பாலியல் வன்புணர்வு வழக்கில், தேரா சச்சா சவுதா ஆன்மீக அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங், இரண்டு பெண் பக்தர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2002ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 25ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. தண்டனை விவரங்கள் 28ம் தேதி (இன்று) கூறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநிலங்களில் தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் நீடித்த இந்த கலவரத்தில் மொத்தம் 38 பேர் ப
சர்ச்சை நாயகன் குர்மீத் ராம் ரஹீம்!

சர்ச்சை நாயகன் குர்மீத் ராம் ரஹீம்!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாமியார் என்றாலே சர்ச்சைகள் இல்லாமலா?. வாயில் இருந்து லிங்கம் எடுப்பதாக பரபரப்பை ஏற்படுத்திய பிரேமானந்தா, ராஜீவ் கொலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்திராசாமி, சங்கரராமன் கொலை வழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயேந்திரர் என சாமியார்களை சுற்றி சர்ச்சைகளும் றெக்கை கட்டி பறந்துள்ளன. இவர்களை எல்லாம் ஓரங்கட்டி, எப்போதும் தன்னை சர்ச்சை வளையத்திற்குள்ளேயே வைத்திருப்பவர்தான் குர்மீத் ராம் ரஹீம் சிங். தேரா சச்சா சவுதா, என்பது ஓர் ஆன்மீக சபை. இதன் தலைவராக 1990ம் ஆண்டு பொறுப்புக்கு வந்தவர்தான் குர்மீத் ராம் ரஹீம். ஆரம்பம் முதலே தனக்கென ஒரு தொண்டர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். இளம் வயதிலேயே ஆன்மீக தீட்சை பெற்றவர், அவர் ஒரு தெய்வப்பிறவி என்றெல்லாம் சொல்ல வைத்தார். சாமியார் என்றாலே காவி உடையில் அல்லது வெள்ளை உடையில்தான் இருக்க வேண்டும் என்ற மரபை உடைத்தார், குர்மீத் ராம். ராமராஜன், டி.