மார்வாரிகளால் போலீசார் காட்டில் மழை… எடப்பாடி மாவட்டத்தில் சக்கப்போடு போடும் போதைப்பொருள் வர்த்தகம்!
- சிறப்பு செய்தி -
சேலம் மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள் வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறது. குறிப்பாக மார்வாரி சமூகத்தினர் இந்த வணிகத்தில் ஏகபோகமாக திளைத்து வருவதோடு, அவர்களைக் கண்டும் காணாமலும் இருக்க காவல்துறையினர் காட்டிலும் பண மழை கொட்டி வருகிறது.
குட்கா, ஹான்ஸ், பான்பராக், மாணிக்சந்த் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு நடுவண் அரசு நாடு முழுவதும் தடை விதித்துள்ள நிலையில், சேலம் மாநகரில் மட்டும் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணான சேலம் மாவட்டத்திலேயே இந்தப் பொருள்கள் தடையில்லாமல் கிடைப்பது பல மட்டத்திலும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.
மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் மருத்துவர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி ரெய்டுகள் நடத்தி, ...