Sunday, May 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: greenfield express way

எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை செய்ய எதிர்ப்பு; விவசாயிகளை மிரட்டிய போலீசார்!!

எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை செய்ய எதிர்ப்பு; விவசாயிகளை மிரட்டிய போலீசார்!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு கடுமையாக வலுத்துள்ள நிலையில், இன்று (ஜூலை 23, 2018) மேம்பாலம் கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்ய வந்த ஊழியர்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை கைது செய்து விடுவோம் என்று காவல்துறையினர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக சேலம் மாவட்டத்தில் மொத்தம் 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், 186 ஹெக்டேர் நிலங்கள், தனியார் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள் ஆகும்.     சேலம் மாவட்டம் ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, குப்பனூர், நிலவாரப்பட்டி, சித்தனேரி, பாரப்பட்டி, பூலாவாரி அக்ரஹாரம் உள்ளிட்ட 20 கிராமங்களின் வழியாக எட்டு வழிச்சாலை செல்கிறது. விவசாய நிலத்தை அழித்துப் போடப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக
எட்டு வழிச்சாலைக்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவாம்… – எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!

எட்டு வழிச்சாலைக்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவாம்… – எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு சில விவசாயிகள் தவிர, பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பொய்யான தகவலை இன்று (ஜூலை 19, 2018) தெரிவித்துள்ளார்.     டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   ''கடந்த ஆட்சியின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்துணவு முட்டைக்கான டெண்டர் நடைபெறும். அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து, அதில் முறைகேடுகள் நடந்து வந்தன. அதனால்தான் மாநில அளவில் முட்டை டெண்டர் விடும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில்தான் டெண்டர் விடப்படுகிறது. இதற்கென ஒரு கமிட்டி அமைத்து, எவ்வித முறைகேடுக்கும் இடமின்றி டெண
சேலத்தில் ‘மினி எமர்ஜென்ஸி!’  விவசாயிகளை நெருங்கினாலே கைது…  சீமான் உள்பட 22 பேருக்கு காப்பு!!

சேலத்தில் ‘மினி எமர்ஜென்ஸி!’ விவசாயிகளை நெருங்கினாலே கைது… சீமான் உள்பட 22 பேருக்கு காப்பு!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில், எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் கருத்து கேட்கவோ, ஆறுதல் சொல்லவோகூட செல்லக்கூடாது என காவல்துறை மூலம் தமிழக அரசு 'மினி எமர்ஜென்ஸி' உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையும் மீறி விவசாயிகளை சந்திக்கச் சென்ற சீமான் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட 22 பேரை காவல்துறையினர் இன்று (ஜூலை 18, 2018) கைது செய்து, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துள்ளனர்.   சேலம் - சென்னை இடையிலான பசுமைவழி விரைவுச்சாலை எனப்படும் எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு சேலம் மாவட்ட விவசாயிகள், பொதுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்படும் மக்களிடம் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி நிர்வாகிகளுடன் இன்று காலை, சேலம் அருகே உள்ள பாரப்பட்டி கூமாங்காடு கிராமத்தில
எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்…  மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்… மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை - சேலம் இடையிலான எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோரை கேலி, கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில்  வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ்கள் ரொம்பவே வைரல் ஆகி வருகின்றனர்.   சென்னை - சேலம் இடையே எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டம், 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்காக 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், 90 சதவீத நிலம், விளை நிலங்கள் ஆகும்.     இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதில் இருந்தே விவசாயிகள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, விவசாயிகள் தானாகவே முன்வ
நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

அரசியல், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஜவுளிக்கடை, பால் நிறுவனத்தில் சொற்ப ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக அதிகாரிகள் மூலம் ஆசை வார்த்தை கூறி வருகிறது சேலம் மாவட்ட நிர்வாகம். கொத்தடிமை வேலையில் சேர்வதற்காகவா எங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்பு படிக்க வைத்தோம்? என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சென்னை - சேலம் இடையிலான பசுமைவழி விரைவுச்சாலை திட்டம் குறித்த அறிவிப்பு வந்த நாள் முதலே முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   பாரத்மாலா பரியோஜனா என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள பசுமைவழி விரைவுச்சாலைக்காக, சேலம் மாவட்டத்தில் 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைகிறது. இந்த சாலை 70 மீட்டர் அகலத்தில் 8 வழிச்சாலையாக விர
தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல… அராஜகம்! சேலம் விவசாயிகள் கொதிப்பு!!

தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல… அராஜகம்! சேலம் விவசாயிகள் கொதிப்பு!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயல்வெளிகளில் கருப்புக்கொடி நட்டு நூதன போராட்டம் நடத்தினர். சென்னை - சேலம் இடையில் புதிதாக எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 277.30 கி.மீ. அமைய உள்ள இந்த வழித்தடத்தில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது.   இதற்காக தனியார் பட்டா நிலங்கள், விளை நிலங்களை அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணிகள் கடந்த 18ம் தேதி தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. இரு போகம் விளையக்கூடிய நிலம், 50 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைக்கும் வற்றாத கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தென்னை, மா, கொய்யா தோப்புகள் என மீட்டெடுக்க முடியாத இயற்கை வளங்களும் இந்த சாலைக்கு இரையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   இதனால் சேலம் மாவட்டம் முழுவதும்