உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!
''உங்களை யாரோடும் ஒப்பிடவோ, யாரைப் போலவும் இருக்க வேண்டும் என்றோ முயற்சிக்க வேண்டாம்; ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்,'' என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சேலம் பெரியார் பல்கலையில் செவ்வாய்க்கிழமை (நவ. 27, 2018) நடந்த பதினெட்டாவது பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
130 பேருக்கு தங்கப்பதக்கம்:
பல்கலை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 130 மாணவ, மாணவிகளுக்கு வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தங்கப்பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளில் பிஹெச்.டி. ஆய்வை முடித்த 130 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கி, பாராட்டினார்.
பெரியார் பல்கலை மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலையில் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 49534 பேருக்கு ...