Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Goondas

பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் மீது குண்டாஸ் பாய்ந்தது!

பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் மீது குண்டாஸ் பாய்ந்தது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தொடர்ந்து சில ஆண்டுகளாக போலீசுக்கு போக்குக் காட்டி வந்த பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னனை, சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் இன்று (ஆகஸ்ட் 13, 2018) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.   சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 17.7.2018ம் தேதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு ஸ்வராஜ் மஸ்தா வேனையும், காரையும் தடுத்து சோதனையிட்டனர். வேனில் இருந்து 25 மூட்டைகளில் 1250 கிலோ ரேஷன் அரிசியும், காருக்குள் 5 மூட்டைகளில் 250 கிலோ ரேஷன் அரிசியும் இருப்பது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் வேன் டிரைவர் கீழே எகிறி குதித்து தப்பி ஓடிவிட்டார். காரில் இருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த சித்திரை பாண்டியன் மகன் டேவிட் (43
திருமுருகன் காந்தி மீதான ‘குண்டாஸ்’ ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு:  “தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக”

திருமுருகன் காந்தி மீதான ‘குண்டாஸ்’ ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு: “தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக”

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, பல்வேறு அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ''தமிழகத்தை தில்லிக்கு விற்கும் தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக'' என்று அவரை வரவேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு எதிராக, குறிப்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுபவர்களை காவல்துறையினர் கைது செய்வதும், அவர்கள் மீது திட்டமிட்டு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. தமிழ், தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது மே 17 இயக்கம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 'தமிழ், தமிழர், தமிழர் உரிமைகள் என்ற மு-ழக்கங்களை ஒழித்துக் கட்டினால்தான் தமிழகத்தில் இந்து, இந்துத்துவம் என்ற பாசிச கொள்கைகளை வளர்க்க முடியும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் நம
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் ரத்து – ஹைகோர்ட்

சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் ரத்து – ஹைகோர்ட்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சேலத்தை அடுத்த பள்ளிக்கூடத்தானூரை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகள் வளர்மதி. சேலம் பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். இயற்கை பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் சேலம் மாவட்ட பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த அமைப்பின் சார்பில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன், கதிராமங்கலம் ஓஎன்ஜிசி ஆகிய திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்ததுடன், துண்டு பிரசுரங்கள் வாயிலாக மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அருகே இத்திட்டங்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறையினர், அரசுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டி விடுவதாகவும், ஆட்சேபகரமான துண்டு பிரசுரங்களை வெளியி