Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: goat-tiger game

ஆணவக்கொலை: ஆடுபுலி ஆட்டம் இனி ஆரம்பம்! வருகிறார் ப.பா.மோகன்…! கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம்!!#Gokulraj

ஆணவக்கொலை: ஆடுபுலி ஆட்டம் இனி ஆரம்பம்! வருகிறார் ப.பா.மோகன்…! கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம்!!#Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் திடீரென்று அரசுத்தரப்பு வழக்கறிஞராக பவானி. பா.மோகனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது, இந்த வழக்கில் பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.   ஆணவக்கொலை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தார். 2015, ஜூன் 23ம் தேதியன்று காலை, உடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தோழி சுவாதியைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.   மறுநாளான 24.6.2015ம் தேதியன்று, கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலிப்ப
ஜெயலலிதா மருத்துவ அறிக்கை வெளியானதன் பின்னணி என்ன?: பரபரப்பு தகவல்கள்

ஜெயலலிதா மருத்துவ அறிக்கை வெளியானதன் பின்னணி என்ன?: பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது இருந்த உடல்நிலை குறித்த அறிக்கை இன்று (செப். 28) திடீரென்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானதன் பின்னணியில், சசிகலா - டிடிவி தினகரன் தரப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மக்களே மறந்திருந்த ஜெயலலிதாவின் அப்பல்லோ மருத்துவமனை நினைவுகள், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டிகளால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. 'அம்மா இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை' என்று அவர் சொன்னது, கடந்த பத்து நாள்களாக மீண்டும் ஜெயலலிதா மரணத்தின் மீது மக்களின் கவனம் திசை திரும்ப காரணமாக அமைந்தது. அதேநேரம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது தாங்கள் உள்பட எல்லா அமைச்சர்களும் நேரில் பார்த்தோம் என்று கூறினர். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், மைனாரிட்டி அரசாங்கம், ஆட்சிக்கலைப்பு
‘ஸ்பைடர்’ – திரை விமர்சனம்!

‘ஸ்பைடர்’ – திரை விமர்சனம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம் 'ஸ்பைடர்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நேற்று (செப். 27) வெளியாகி இருக்கிறது. இது ஒரு சைக்கோ திரில்லர் வகைமையிலான படம். இந்திய உளவுத்துறையில் ஃபோன் அழைப்புகளை டேப்பிங் செய்யும் பிரிவில் பணியாற்றுகிறார் ஹீரோ சிவா (மகேஷ்பாபு). சட்டத்திட்டங்களை மீறினால்தானே சாதாரண ஹீரோ, சூப்பர் ஹீரோ ஆக முடியும்?. ஸ்பைடர் ஹீரோவும் அப்படித்தான். தனது 'ஸ்பை ஆப்' மூலம், அபாயகரமான சூழலில் சிக்கித்தவிக்கும் மக்களின் பிரச்னைகளை கண்டறிந்து, அதாவது ஃபோன் பேச்சை ஒட்டுக்கேட்டு, பிரச்னையில் சிக்கும் முன்பே அவர்களை மீட்கும் வேலைகளில் ஈடுபடுகிறார் மகேஷ்பாபு. இளம்பெண் ஒருவர் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்க, அவரை காப்பாற்றுவதற்காக உடன் பணியாற்றும் சக பெண் போலீஸ் ஒருவரை அந்த பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். மறுநாள் பெண் ப