Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: garbage carts

சேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை! போலி கம்பெனிக்கு டெண்டர்!

சேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை! போலி கம்பெனிக்கு டெண்டர்!

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
குப்பைகளை அள்ளிச் செல்வதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பேட்டரி வண்டிகளிலும் பல லட்சங்களை ஓசையின்றி வாரிச்சுருட்டி இருக்கிறது சேலம் மாநகராட்சி.  சேலத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவதற்காக கடந்த 2016ம் ஆண்டில் மத்திய அரசு முதல்கட்டமாக 111 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால், இந்த நிதியை செலவிடாமல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை அடை காத்து வந்தது மாநகராட்சி. மத்திய அரசு ரிவிட் அடித்த பிறகே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கான கன்சல்டன்சியை நியமித்தது.   இத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிப்பதற்காக பேட்டரிகளால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை கொள்முதல் செய்தது சேலம் மாநகராட்சி. பெரிய பெரிய இரும்பு கலன்களில் உள்ள குப்பைகளை தூக்கி லாரிகளில் கொட்ட ரொம்பவே சிரமப்பட்டு வந்த துப்புரவு தொழிலாளர்கள