Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Ganapathi

முன்னாள் துணைவேந்தர்  கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவல்

முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவல்

குற்றம், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து கணபதியை பிப்ரவரி 6ம் தேதி முதல் பணி இடைநீக்கம் செய்வதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். கணபதியை கைதுக்குப் பின்னர் 20க்கும் மேற்பட்டோர் அவர் மீது புதிதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர். பணி நியமன விவகாரத்தில் கணபதி மட்டுமின்றி அரசியல் புள்ளிகளுக்கும், பிற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சிலருக்கும்கூட தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை கோவை ஊழல் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மி...
பாரதியார் பல்கலை விவகாரம்; சிபிஐ விசாரணை தேவையில்லை!; சுனில் பாலிவால்

பாரதியார் பல்கலை விவகாரம்; சிபிஐ விசாரணை தேவையில்லை!; சுனில் பாலிவால்

கோயம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனங்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் கூறியுள்ளார். கோயம்பத்தூர் பாரதியார் பல்கலை துணை வேந்தராக இருந்த கணபதியை, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். தமிழக உயர்கல்வித்துறை வரலாற்றில் பணியில் இருக்கும் துணை வேந்தர் ஒருவர், லஞ்ச புகாரில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. கணபதி, துணை வேந்தராக பொறுப்பேற்றதில் இருந்து நடந்த அனைத்து பணி நியமனங்களிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடியதாகவும், ஆட்சியாளர்களுக்கும் அதில் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் புகார்கள் கூறின. மேலும், இது தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை ந...
துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்;  கட்டப்பஞ்சாயத்து  ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்; கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்ததாக 20 பேர் புதிதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவில் புகார்கள் அளித்துள்ளனர். மேலும், உதவி பேராசிரியர் சுரேஷை கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் பணம் கேட்டு கடுமையாக மிரட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தராக பணியாற்றி வந்த கணபதியை, கடந்த 3ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரை பணி நியமனம் செய்வதற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து, அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கணபதிக்கு தரகு வேலை பார்த்ததாக பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மற்றொரு பேராசிரியர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரு...
‘லஞ்ச’ துணைவேந்தர் கணபதிக்கு  நள்ளிரவில் ஊர் சுற்றிக்காட்டிய போலீசார்!

‘லஞ்ச’ துணைவேந்தர் கணபதிக்கு நள்ளிரவில் ஊர் சுற்றிக்காட்டிய போலீசார்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜை, நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கு முன்பாக நள்ளிரவு நேரத்தில், அவரை ஜீப்பில் அழைத்துச்சென்று போலீசார் ஊர் சுற்றிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி (67). இப்பல்கலையில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர், கடந்த 2016ம் ஆண்டிலேயே இந்தப்பணியில் சேர்ந்துள்ளார். சில விதிகளை மீறி, சுரேஷை உதவிப்பேராசிரியராக நியமிக்க வேண்டுமெனில் ரூ.30 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதி கேட்டுள்ளார். அதை தருவதாக ஒப்புக்கொண்ட சுரேஷ், கொஞ்சம் தொகையை முன்பணமாகக் கொடுத்துள்ளார். மீதப்பணத்தை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக அவகாசம் கேட்டுள்ளார். அந்த நம்பிக்கையின்பேரில் அவர் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால...