Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: fraud

50 கோடி ரூபாய் சுருட்டல்; அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் கைது! கரும்பலகை குற்றத்தில் இது வேற லெவல்!

50 கோடி ரூபாய் சுருட்டல்; அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் கைது! கரும்பலகை குற்றத்தில் இது வேற லெவல்!

முக்கிய செய்திகள், வேலூர்
வட்டித்தொழில் தொடங்கி பாலியல் அத்துமீறல் வரை குற்றங்களில் அனாயசமாக ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர்.   வேலூர் மாவட்டம் கொணவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (55). அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் தர்மலிங்கம் (60). காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவன், மனைவி இருவரும் இணைந்து வேலூரில் கடந்த 2018ம் ஆண்டு கார், லாரி, ரியல் எஸ்டேட் தொழில்களை அடுத்தடுத்து தொடங்கினர். இவர்கள் நடத்தி வரும் தொழில்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வலை விரித்தனர்.   வெறும் 175 ரூபாய் ஊக்கத் தொகைக்காக பணம் கொடுத்தாவது எம்.ஃபில் பட்டத்தைப் பெறுவதில் முனைப்பு காட்டும் ஆசிரியர்களிடம், முதலீட்டுக்கு அதிக வட்டி என்றால் சும்மா
போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
-சிறப்பு செய்தி-   சுங்குவார் சத்திரத்தில் சுக்கு காபி விற்ற அனுபவம் இருந்தாலே போதும், வணிகவியல் துறை பேராசிரியர் ஆகிவிடலாம் என்பதை நிரூபித்து இருக்கிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். பீடிகை போடாமல் நேராக விஷயத்துக்கு வருவோம்.   பெரியார் பல்கலையில் கடந்த 2015-2016ம் ஆண்டின் வரவு, செலவினங்கள் தணிக்கை செய்யப்பட்டது. உள்ளாட்சித் தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையிலான குழுவினர், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை தணிக்கைப் பணிகளை நடத்தி முடித்தனர்.   தணிக்கை நடத்திய காலக்கட்டம் வரை கடந்த 20 ஆண்டுகளில் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கிட்டத்தட்ட ரூ.47 கோடிக்கு உரிய செலவின ஆவணங்களை தணிக்கைக்கு உட்படுத்தவில்லை என்பது, தணிக்கை அறிக்கையின் ஹைலைட் பாயிண்ட்.   அந்த அறிக்கையில், மேலும் பல முறைகேடுகள் சுட்டிக்காட்டப
அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா கையெழுத்திட்டு உள்ள நிலையில், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினகரன் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மாறி மாறி முண்டா தட்டுவதால், உச்சக்கட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது. அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (28/8/17) காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஊடகங்களை கட்சியே ஏற்று நடத்துவது, தினகரனால் நியமிக்கப்பட்ட பதவிகள் செல்லாது, தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும், விரைவில் பொதுக்குழு&செயற்குழுவைக் கூட்டுவது என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது தற்காலிகமானது என்றும், அவருடைய நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் குறிப்பிட