Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: financial deficit

தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கை, சட்டப்பேரவையில் செவ்வாயன்று (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் கடன் சுமை, அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் 5.70 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.   தமிழக சட்டப்பேரவையில், 2021-2022ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், செவ்வாய்க்கிழமை (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். விரைவில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.   நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:   தமிழக அரசின் நிதி பற்றாக்குறை மாநில அரசின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2021-2022ம் நிதியாண்டில் 4 சதவீதத்திற்குள்ளும், 2022-2023ம் நிதியாண்டில் 3.5 சதவீதத்திற்குள்ளும்,...