2000 கோடி ரூபாய் பிஸினஸை இழப்பார்களா ரஜினியும் கமலும்?
வெள்ளித்திரைக்கு வெளியே அரசியல் தொடர்பாக ரஜினி எப்போது பேசினாலும், அவர் மீது ரசிகர்கள் சாராத மக்களுக்கு ஒருவித அய்யப்பாடு இதுவரை இருந்து வந்திருக்கிறது. 'எல்லாம் அடுத்த பட புரமோஷனுக்கான வேலைப்பா. படம் ரிலீசாகும்போது இப்படி பேசினாத்தானே கல்லா கட்ட முடியும்...' என்ற விமர்சனங்கள் எழுவது உண்டு.
அந்த விமர்சனங்களை நாம் முற்றாக புறந்தள்ளிவிடவும் முடியாது; அதேநேரம் ரஜினியின் சந்தை நிலவரம் அந்தளவுக்கு சரிந்து விட்டதாகவும் கூற முடியாது. இன்றைக்கும் தமிழில் ரஜினியை வைத்து மட்டுமே மிகப்பெரும் பட்ஜெட்டில் படமெடுக்க முடியும் என்று நம்பும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உண்டு. உதாரணம், முன்பு 'எந்திரன்'. இப்போது, '2.0'
ரஜினி ஒரு படத்துக்கு ரூ.55 கோடி ஊதியம் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கமல்ஹாசனின் நிலவரம் அப்படிப்பட்டதன்று. ரஜினியின் ஊதியத்தில் பாதிதான் கமலின் ஊதியம் என்கிறார்கள் விவரம...