சர்ச்சை நாயகன் குர்மீத் ராம் ரஹீம்!
சாமியார் என்றாலே சர்ச்சைகள் இல்லாமலா?. வாயில் இருந்து லிங்கம் எடுப்பதாக பரபரப்பை ஏற்படுத்திய பிரேமானந்தா, ராஜீவ் கொலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்திராசாமி, சங்கரராமன் கொலை வழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயேந்திரர் என சாமியார்களை சுற்றி சர்ச்சைகளும் றெக்கை கட்டி பறந்துள்ளன. இவர்களை எல்லாம் ஓரங்கட்டி, எப்போதும் தன்னை சர்ச்சை வளையத்திற்குள்ளேயே வைத்திருப்பவர்தான் குர்மீத் ராம் ரஹீம் சிங்.
தேரா சச்சா சவுதா, என்பது ஓர் ஆன்மீக சபை. இதன் தலைவராக 1990ம் ஆண்டு பொறுப்புக்கு வந்தவர்தான் குர்மீத் ராம் ரஹீம். ஆரம்பம் முதலே தனக்கென ஒரு தொண்டர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். இளம் வயதிலேயே ஆன்மீக தீட்சை பெற்றவர், அவர் ஒரு தெய்வப்பிறவி என்றெல்லாம் சொல்ல வைத்தார்.
சாமியார் என்றாலே காவி உடையில் அல்லது வெள்ளை உடையில்தான் இருக்க வேண்டும் என்ற மரபை உடைத்தார், குர்மீத் ராம். ராமராஜன், டி....