Saturday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: farmers prayer

”எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை தொட்டால் கை கால் வௌங்காமல் போய்டும்!” –  பூசாரி அருள்வாக்கு; போலீசார் ஓட்டம்!!

”எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை தொட்டால் கை கால் வௌங்காமல் போய்டும்!” – பூசாரி அருள்வாக்கு; போலீசார் ஓட்டம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் குலதெய்வ கோயிலில் படையலிட்டு வேண்டியபொழுது, திடீரென்று அருள் வந்து ஆடிய பூசாரி, 'எட்டு வழிச்சாலைக்காக நிலத்தை தொடும் அதிகாரிகளுக்கு கை, கால் வௌங்காமல் போய்டும்.... கண்ணு தெரியாமல் போய்டும்...' என்று அருள்வாக்கு கூறியதால் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் பதற்றத்தில் தெறித்து ஓடினர்.   சேலம் - சென்னை இடையில் எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 36.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழிச்சாலை அமைகிறது. இதற்காக தனியார் பட்டா நிலம் 186 ஹெக்டேர் உள்பட மொத்தம் 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உ...