எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!
அரசியல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த அராசணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 8, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
சேலம் முதல் சென்னை வரையில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் பாஜக மற்றும் தமிழக அதிமுக அரசுகள் மும்முரமாக செயல்பட்டு வந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தால், சேலம் - சென்னை இடையிலான பயண நேரம் 70 கி.மீ. தூரம் குறையும் வகையில் மொத்தம் 277.3 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைக்கப்படும் என்று வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்டது.
இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலம் தேவை என்பதும்...