கோஷ்டி பூசல்களால் தடுமாறும் ரஜினி மக்கள் மன்றம்!
ரஜினிகாந்த், 'போர் வரட்டும், அதுவரை காத்திருங்கள்' என்று எதை நினைத்து சொன்னாரோ... ஆனால், சேலத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கோஷ்டி பூசல் அக்கப்போர்களால் உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்ட ஒட்டுமொத்த பணிகளும் அடியோடு முடங்கியுள்ளன.
கோஷ்டி பூசல்
திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற வளர்ந்த கட்சிகளுக்கே உரித்தான கோஷ்டி பூசல்களைக் காட்டிலும், இன்னும் முளை விடவே ஆரம்பிக்காத ரஜினி மக்கள் மன்றத்தில் உள்கட்சி மோதல்கள் உச்சத்தை அடைந்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று வெளிப்படையாக அறிவித்தார். அதன்பின்னர், தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றினார்.
சலசலப்பு
பாபா முத்திரை, இணையம் வழியாக புதிய உறுப்பினர் சேர்க்கை என அடுத்தடுத்த நகர்வுகளால் வேகமெடுத்தது ரஜினி மக்...