பட்டுவாடா பணத்தில் ‘கட்டிங்’; எடப்பாடியில் திமுக அப்செட்!
எடப்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக, திமுக மேலிடம் வழங்கிய பணத்தில் கை வைத்த மேற்கு மா.செ., கணிசமான தொகையை, மேட்டூர் தொகுதிக்கு மடைமாற்றம் செய்ததாக பரபரப்பு புகார்கள் கிளம்பியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (ஏப். 23) நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவினாலும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளிடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
முக்கிய கட்சிகள் கடந்த இரு நாள்களாக வாக்காளர்களுக்கு கரன்சி பாசனத்தில் கவனம் செலுத்தி வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிடும் சேலம் வடக்கு, அம்மாபேட்டை லோகநாதன் களமிறங்கியுள்ள சேலம் தெற்கு, கொளத்தூர் மிதுன் சக்கரவர்த்தி களம் காணும் மேட்டூர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் ஆளுங்கட்சியான திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பட்டுவ...

