2 பாடங்களுக்கு மறு தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு; மாணவர்கள் கொதிப்பு#CBSE
தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொருளியல் ஆகிய இரு பாடங்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ இன்று (மார்ச் 28, 2018) அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எஸ்எஸ்எல்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 28 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு, இம்மாதம் 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வந்தது. இன்று (மார்ச் 28, 2018) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்தேர்வு நடந்தது.
இத்தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே வெளியானதாக புகார்கள் எழுந்தன. கையால் எழுதப்பட்ட வினாத்தாள் ஒன்று வாட்ஸ்அப்பில் நேற்று இரவே வெளியானது. அதிலுள்ள பல வ...