Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Diwali festival

சுவைத்தாலே பரவசம்… ஆவினில் ஸ்பெஷல் கேரட் மைசூர்பா அறிமுகம்!

சுவைத்தாலே பரவசம்… ஆவினில் ஸ்பெஷல் கேரட் மைசூர்பா அறிமுகம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் ஆவின் நிறுவனம் புதிய முயற்சியாக ஸ்பெஷல் கேரட் மைசூர்பாவை அறிமுகம் செய்திருக்கிறது. தித்திக்கும் இதன் சுவை, மனிதர்களின் சுவை உணர்வை மேலும் பரவசமாக்குகிறது. தமிழ்நாட்டில் 17 இடங்களில் ஆவின் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில் இயங்கி வரும் ஆவினுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. தினமும் 5 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் கொள்முதல் செய்கிறது. நேரடி பால் விற்பனை மட்டுமின்றி நெய், வெண்ணெய், டெட்ரா பால், நறுமணப்பால், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்கள் விற்பனையும், கணிசமான சந்தைப் பங்களிப்பையும் கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தாண்டு புதிய முயற்சியாக சேலம் ஆவின் நிறுவனம், ஸ்பெஷல் கேரட் மைசூர்பா என்ற இனிப்பு
சமையல் காஸ் சிலிண்டர் விலை 63 ரூபாய் உயர்ந்தது! ரூ.979 ஆக நிர்ணயம்!!

சமையல் காஸ் சிலிண்டர் விலை 63 ரூபாய் உயர்ந்தது! ரூ.979 ஆக நிர்ணயம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் விலை நடப்பு நவம்பர் மாதத்திற்கு ரூ.979 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, முந்தைய அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் 62.50 ரூபாய் அதிகமாகும். ரூ.979 ஆக நிர்ணயம்   காஸ் சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை, உற்பத்தி மற்றும் உள்ளூரில் காஸ் சிலிண்டர்களுக்கான தேவை, ஆலைகளின் உற்பத்தித்திறன் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.   அதன்படி நடப்பு 2018, நவம்பர் மாதத்திற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, ரூ.979 ஆக நிர்ணயித்துள்ளது. இது, முந்தைய அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 62.50 அதிகமாகும
‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டாஸ்மாக் மதுபானங்களின் விலையை, பாட்டிலுக்கு 12 ரூபாய் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு முன்பே இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே மதுவிலக்குக் கொள்கையை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியேற்ற உடனே முதல்கட்டமாக 500 மதுபான கடைகளை மூடி உத்தரவிட்டார். மதுக்கடைகள் திறக்கப்படும் நேரமும் காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணிக்கு மாற்றப்பட்டது. படிப்படியாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று சொல்லப்பட்டாலும் அதைப்பற்றி அதிமுக அரசு அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கின்பேரில், நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூட