பாகமதி – சினிமா விமர்சனம்
அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் இன்று (ஜனவரி 26, 2018) ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது, 'பாகமதி'. ஹாரர் மற்றும் அரசியல் திரில்லர் கலந்த புதிய கோணத்தில் மிரட்டுகிறாள் பாகமதி.
நடிப்பு: அனுஷ்கா, உண்ணி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், முரளி ஷர்மா, பிரபாஸ் சீனு, 'தலைவாசல்' விஜய், வித்யூலேகா, தேவதர்ஷினி மற்றும் பலர். இசை: எஸ்எஸ் தமன்; ஒளிப்பதிவு: மதி; எடிட்டிங்: கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்; தயாரிப்பு: ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ்; இயக்கம்: ஜி.அசோக்.
பாகமதி கதையை அனுஷ்காவிடம் கடந்த 2012ம் ஆண்டிலேயே சொல்லிவிட்டு, அவருடைய கால்ஷீட்டுக்காக அய்ந்து ஆண்டுகள் காத்திருந்தாராம் படத்தின் இயக்குநர். அந்த காத்திருப்பு, கொஞ்சமும் வீண் போகவில்லை. இயக்குநருக்கும், அனுஷ்காவிற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படம்தான்.
கதை என்ன?:
பாகமதியில், சஞ்சலா என்ற பாத்திரத்தில் அனுஷ்கா ஒரு நேர