Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Dhoni

செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர்களின் ரன் குவிப்பும், பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி செஞ்சூரியனில் நேற்று (பிப்ரவரி 21, 2018) நடந்தது. 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய அணியில், தசை பிடிப்பால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரை வீசிய கிறிஸ் மோரீஸ் ...
மொஹாலி கிரிக்கெட்: இலங்கையை நொறுக்கியது இந்தியா!; ரோஹித் இரட்டை சதம்!!

மொஹாலி கிரிக்கெட்: இலங்கையை நொறுக்கியது இந்தியா!; ரோஹித் இரட்டை சதம்!!

தமிழ்நாடு
மொஹாலியில் நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, ஒருநாள் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணியை இலங்கை வெறும் 112 ரன்களில் வாரிச்சுருட்டி, அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று (டிசம்பர் 13, 2017) நடந்தது. முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கும், கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியிலும் ரோஹித் ஷர்மா இருந்தார். இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் ச...
சாதனை: டோனி ‘100’ – கோஹ்லி ‘1000’

சாதனை: டோனி ‘100’ – கோஹ்லி ‘1000’

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
டோனி: இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அந்த நாட்டு வீரர் தனஞ்ஜெயாவை டோனி, 'ஸ்டம்பிங்' செய்து அவுட் ஆக்கினார். இதன்மூலம், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் டோனி 100 வீரர்களை 'ஸ்டம்பிங்' முறையில் அவுட் செய்து உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இலங்கையின் முன்னாள் விக்கெட் கீப்பர் சங்ககரா (99 முறை) உள்ளார். கோஹ்லி: இலங்கை உடனான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் கோஹ்லி இரண்டு முறை சதம் விளாசி உள்ளார். நடப்பு ஆண்டில், 18 ஒரு நாள் போட்டிகளில் கோஹ்லி  1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்....
டோனி ‘நாட்- அவுட்’ சாதனை!

டோனி ‘நாட்- அவுட்’ சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி, ஒரு நாள் போட்டிகளில் 73 முறை அவுட் ஆகாமல் இருந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றுவிட்ட டோனி, ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று (31/8/17) நடந்தது. இது, டோனிக்கு 300வது ஒரு நாள் போட்டியாகும். இந்தப் போட்டியில் டோனி, அவுட் ஆகாமல் 49 ரன்கள் எடுத்தார். இன்னும் ஒரு ரன் எடுத்திருந்தால் 100வது அரை சதம் என்ற சாதனையை படைத்திருப்பார். ஆனால், 50 ஓவர்களும் முடிந்து விட்டன. எனினும், அவர் மற்றொரு புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி...
கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
பல்லேகெலே: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து சொதப்பி வந்ததால், அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் குடிநீர் பாட்டில்கள வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டாலும், இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியுடன் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி, தொடரை முழுமையாக வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை வென்று, தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த தொடரையும் முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இன்று (27/8/17) மூன்றாவது போட்டியில் களமிறங்கி...