Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Delhi High Court

நீட் தேர்வு:  பொதுப்பிரிவினர் வயது வரம்புக்கு இடைக்காலத் தடை;  சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்!

நீட் தேர்வு: பொதுப்பிரிவினர் வயது வரம்புக்கு இடைக்காலத் தடை; சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்!

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதும் பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகப்பட்ச வயது வரம்புக்கு இடைக்காலத் தடை விதித்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28, 2018) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவும் சிபிஎஸ்இ-க்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 6ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மார்ச் 9ம் தேதி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. நீட் தேர்வை, பட்டியல் இனப்பிரிவினர் 30 வயது வரை எழுதலாம் என்றும், பொதுப்பிரிவினர்