நாமக்கல்: திமுக நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; உச்சத்தில் உள்கட்சி பூசல்!
குமாரபாளையம் நகர திமுக செயலாளருக்கு சொந்தக் கட்சியினரே 'நாகரிகமாக' கொலை மிரட்டல் விடுத்து, அறிவாலயத்திற்கு அனுப்பியுள்ள மர்ம கடிதம், நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் உஷ்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்
வடக்கு நகர திமுக செயலாளராகவும்,
நகர மன்றத் தலைவராகவும்
இருப்பவர் விஜய்கண்ணன்.
இவர் மீது திமுக மேலிடத்திற்கு
அண்மையில் ஒரு பரபரப்பு புகார்
கடிதத்தை கழக உடன்பிறப்புகள்,
பெயர் குறிப்பிடாமல்
அனுப்பி வைத்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ''விஜய்கண்ணன்,
திருச்சியில் அமைச்சர்
கே.என்.நேருவை சந்தித்து
ஏற்கனவே இருந்த நகர பொறுப்பாளர்
செல்வத்தை தூக்கச் செய்துவிட்டு,
அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார்.
பதவிக்கு வந்த பிறகு மூத்த நிர்வாகிகளை
மதிக்காமல் தான்தோன்றித்தனமாக
செயல்பட்டு வருகிறார். தன்னை மட்டும்
ஃபோகஸ் செய்து கொள்கிறார்.
கட்சியினரின் தனிப்பட...