Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Cut

என் பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்ட வேண்டாம்; கால்வாய் வெட்டுங்கள்!; கமல்ஹாஸன்

என் பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்ட வேண்டாம்; கால்வாய் வெட்டுங்கள்!; கமல்ஹாஸன்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''என் பிறந்த நாளையொட்டி யாரும் கேக் வெட்ட வேண்டாம். அதற்கு பதிலாக கால்வாய் வெட்டுங்கள்'' என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாஸன் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறியிருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கடலில் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கலப்பதாக ட்விட்டரில் புகார் கூறியிருந்தார். மேலும், அவர் அதிகாலையில் திடீரென்று எண்ணூர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வும் மேற்கொண்டார். வழக்கமான ட்விட்டர் அரசியலில் இருந்து கமல் நேரடியாக களம் இறங்கியது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்ப டுத்தியது. அத்துடன் அவர், அங்குள்ள மீனவ மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி அன்றுதான் ரசிகர்களை சென்னைக்கு நேரில் வரவழைத்து சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தாண்டு இரண்டு நாள்கள் முன்னதா
மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருக்கும் மெர்சல் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் உள்பட ஏழெட்டு திரைப்படங்களின் கூட்டுக் கலவையாக வெளிவந்திருப்பதாக எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. மலையாளம், வங்கமொழிப் படங்களைப்போல தமிழ் படங்களில் கதையின் அடர்த்தி வலுவாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ரொம்ப காலமாகவே சொல்லப்படுவது உண்டு. அண்மைக்காலமாக தெலுங்கில் கூட நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழில் இன்னும் அத்தகைய போக்கு வேகமெடுக்கவில்லை. ஆனால், பரீட்சார்த்த முயற்சிகள் அரிதாக முன்னெடுக்கப்படாமலும் இல்லை. இளம் இயக்குநர்களின் 'ஆரண்ய காண்டம்', 'அழகர்சாமியின் குதிரை', 'காக்காமுட்டை', 'குற்றமே தண்டனை', 'குற்றம் கடிதல்', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்குபொம்மை' போன்ற வித்தியாசமான முயற்சிகள் பரவலாக கவனம் பெற்றன. இந்தப்படங்களில் சில, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன.