Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: corporates

மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவையில் இன்று (பிப்ரவரி 1, 2018) தாக்கலான மத்திய பட்ஜெட், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தரவர்க்கத்தினரை ஏழைகளாகவும் மாற்றும் வகையில் இருப்பதாக மக்களிடம் அதிருப்தி கிளம்பியுள்ளன. 2018&2019ம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கலானது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு தாக்கல் செய்யும் அதன் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். ஒரு பட்ஜெட் அறிக்கை என்பது, எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியதாக வராற்றுச் சான்றுகள் இல்லை. மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்டாகவே இருந்தாலும் அதை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பொதுவான போக்குகள். இன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு விரோதமானது என்று சொல்லிவிடலாகாது. ஆனால், அடுத்து வரவுள்ள சில மாநில சட்டப்பேரவை தேர்தல், அடு
இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார இடைவெளி!; ‘ரிச் கெட் ரிச்சர்’

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார இடைவெளி!; ‘ரிச் கெட் ரிச்சர்’

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்தியாவில் உள்ள 73 சதவீத சொத்துகளும், வளங்களும் நாட்டின் ஒரு சதவீதம் பேரிடம் மட் டுமே குவிந்து கிடப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், இந்தியாவில் ஏழை - பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி ஆண்டுதோறும் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபாம், ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் பொருளாதார இடைவெளி குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளிட்டு வருகிறது. 2017ம் ஆண்டுக்கான அறிக்கையை அண்மையில், 'ரிவார்டு ஒர்க்; நாட் வெல்த்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்பட மொத்தம் பத்து நாடுகளில் 70 ஆயிரம் பேரிடம் இதற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளது. கிடைத்த புள்ளிவிவரங்களைக் கொண்டு டபிள்யூ.இ.எப் என்ற உலக பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் ஆய்வுடன் எந்தளவுக்கு ஒத்துப்போகிறது என்பதையும் தெளிவுபடுத்திய பிறகு, தனது அறி க்கையை வெ