Friday, February 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: cobra post

திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தமிழ்நாட்டுல மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு ஏறிட்டே போறது. அதைவிட இப்பவே கத்திரி வெயிலாட்டம் கொளுத்துது. வெளில தல காட்ட முடியலப்பா...'' என்றபடியே, நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.   வெயிலுக்கு இதமாக மய்ய அரைத்த இஞ்சி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கின வெள்ளரி துண்டுகள் கலந்த மோரை கொண்டு வந்து கொடுத்தார் நக்கலார். ''தேர்தல் சம்பந்தமா லேட்டஸ்ட் சேதி என்ன இருக்கு? கருத்துக்கணிப்பு கிணிப்பு ஏதாச்சும் இருக்கா?'' என்றார்.   ''இப்பலாம் எங்க உருப்படியான கருத்துக்கணிப்பு இருக்கு... எல்லாம் திணிப்புதான். அவங்கவங்க அரிப்புக்கு தகுந்தமாதிரி சொறிஞ்சு விடறதுக்கும் இன்றைக்கு நிறைய ஊடகங்கள், தரகர்கள் வந்துட்டாங்க. அப்படி யாருக்கிட்டதான் கருத்துக்கணிப்பு நடத்துவாங்களோ... கருத்து சொன்ன ஒரு பயலும் பேஸ்புக்லயோ, டிவிட்டர்லயோ, வாட்ஸ்அப்பு...