Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: cloning technology

அடுத்தது குளோனிங் மனிதன்தான்!; ‘குரங்குகள் வந்தாச்சு’

அடுத்தது குளோனிங் மனிதன்தான்!; ‘குரங்குகள் வந்தாச்சு’

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
தொழில்நுட்ப யுகத்தில், சாத்தியமற்றவைகளை எல்லாம் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது விஞ்ஞான உலகம். இப்போது குளோனிங் (Cloning) குரங்குகள் வந்தாச்சு. அடுத்த சில ஆண்டுகளில் குளோனிங் மனித உருவாக்கமும் சாத்தியமே என்ற யூகங்கள் வலுவாக எழுந்துள்ளன. இயற்கையோடு இயைந்தும், அதை எதிர்த்தும் போராடுவதுதான் விஞ்ஞான உலகம். அடுத்த சந்ததியை உருவாக்க உடல் சேர்க்கையே தேவையில்லை என்பதை 20ம் நூற்றாண்டு சாத்தியமாக்கியிருந்தது. அதன் நீட்சி, குளோனிங் தொழில்நுட்பம். ஒருவரை அப்படியே நகலெடுப்பதுதான், குளோனிங். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குளோனிங் மூலம் டாலி என்ற செம்மறி ஆடு, ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டபோது விஞ்ஞானத்தின் உச்சம் என்றும், மனித குலத்திற்கு ஆபத்து என்றும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அறிவியாலாளர்கள் குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் அரிதிலும் அரிதான நோய்களைக்கூட ம