
கோகுல்ராஜின் நெருங்கிய தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்! கைது ஆணையால் அச்சம்!!
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல்
தொடர்ந்து போக்குக் காட்டி வந்த
கோகுல்ராஜின் தோழி சுவாதி,
கைது ஆணை நடவடிக்கைக்கு
பயந்து திடீரென்று நாமக்கல்
நீதிமன்றத்தில் ஆஜராகி
விளக்கம் அளித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி, நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில்தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் நெருங்கிப் பழகி வந்தார். அதனால் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்தன.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல்துறையினர், கோகுல்ராஜை திட்டமிட்டு கொலை செய்ததாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவரா...