
ஜெயலலிதா மருத்துவ அறிக்கை வெளியானதன் பின்னணி என்ன?: பரபரப்பு தகவல்கள்
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது இருந்த உடல்நிலை குறித்த அறிக்கை இன்று (செப். 28) திடீரென்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானதன் பின்னணியில், சசிகலா - டிடிவி தினகரன் தரப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
மக்களே மறந்திருந்த ஜெயலலிதாவின் அப்பல்லோ மருத்துவமனை நினைவுகள், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டிகளால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. 'அம்மா இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை' என்று அவர் சொன்னது, கடந்த பத்து நாள்களாக மீண்டும் ஜெயலலிதா மரணத்தின் மீது மக்களின் கவனம் திசை திரும்ப காரணமாக அமைந்தது.
அதேநேரம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது தாங்கள் உள்பட எல்லா அமைச்சர்களும் நேரில் பார்த்தோம் என்று கூறினர். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், மைனாரிட்டி அரசாங்கம், ஆட்சிக்கலைப்பு ...